வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு... காங்கிரஸ் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி!

 
காங்கிரஸ் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று எதைஎதையோ கடந்து செல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைவர்களை விட, தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் அதிகம் இருப்பதாக பல காலங்களாக சொல்லப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மீது இன்னமும் தொண்டர்கள் அபிமானத்துடன் இருந்து வருகிறார்கள். கோவில்பட்டியில், காங்கிரஸ் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், வேட்பாளர் பட்டியலை மாற்ற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

வழக்கறிஞர் அய்யலுச்சாமி

 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்  தேர்வு ஜனநாயக முறையில் நடைபெறவில்லை, பல கோடி  ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களுக்கும், விசுவாசிகளுக்கும், முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர வலியுறுத்தி 

காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு உடலில் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.   இது குறித்த தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தி ,  அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து  அவரை கைது செய்துகோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web