திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு... 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

 
திமுக

 தமிழகத்தை பொறுத்தவரை  திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம்  கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ததாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.  தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் நேரடியாக  களம் காண்கிறது.  இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை   திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

1,தூத்துக்குடி- கனிமொழி, 
2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.
3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி, 
4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், 
5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, 
7,காஞ்சீபுரம் - ஜி.செல்வம், 
8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை 
10,தர்மபுரி- ஆ.மணி 
11,ஆரணி-தரணிவேந்தன்
12,வேலூர்- கதிர் ஆனந்த், 
13,கள்ளக்குறிச்சி- மலையரசன்
14,சேலம்-செல்வகணபதி
15,கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்.
16,பெரம்பலூர் - அருண் நேரு
 17,நீலகிரி - ஆ.ராசா, 
18,பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி
19,தஞ்சாவூர் - முரசொலி
20,ஈரோடு-பிரகாஷ்
21,தேனி- தங்க தமிழ்செல்வன்

இந்தியாவில்   ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி மக்கள் வாக்களிக்க   உள்ளனர்.  அந்த வகையில் இன்று தமிழகம், புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல்  தொடங்கியுள்ளது.  
 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்  மார்ச் 27ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

மேலும் மார்ச் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிப்பு    வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30- தேதி கடைசி நாள்  இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக  ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இடங்களில் வாக்குப்பதிவுக்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி   ஏப்ரல் 19 தமிழ்நாடு புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web