தொண்டர்கள் அதிர்ச்சி... மேடையிலேயே மோதிக் கொண்ட திமுக அமைச்சர்கள்!

 
திமுக மோதல்

தேர்தல் தேர் திருவிழாவில், நடுத்தெருவுல தேரை இழுத்து விட்டுட்டு ஆளுக்கொரு திசையா திரும்பி நிற்பார்களோ? என்று திமுக தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். விழுப்புரத்தில் நடைப்பெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பொன்முடியும், செஞ்சி மஸ்தானும் கலந்து கொண்டனர். அப்போது மேடையிலேயே இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட சம்பவம் திமுக தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நேற்று நடைப்பெற்ற இப்தார் நிகழ்ச்சியில் முன்பே வந்திருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமைச்சர் பொன்முடி வருவதற்கு முன்பே பேசத் தொடங்கினார்.


மேடையில் அமைச்சர் மஸ்தான் பேசிக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடியைப் பார்த்து, “அமைச்சர் வருகிறார். பேச்சை நிறுத்துங்கள்” என்று கட்சி நிர்வாகி கூறியதைப் பொருட்படுத்தாமல் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். 
அதன் பின்னர் மேடைக்கு வந்த அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தானிடம், ‘பேசியது போதும். மைக்கை தாங்க’ என்று கேட்க, அதற்கு “நான் இன்னும் பேசி முடிக்கவில்லை”  என்றார் செஞ்சி மஸ்தான்.
இத்தனையும் அங்கே கூடியிருந்தவர்கள் முன்னிலையில் நடந்தது. நோன்பு காலத்தில் என்ன செய்வது? யாரை சமாதானப்படுத்துவது என தெரியாமல் கூடியிருந்தவர்கள் விழி பிதுங்கி நின்றிருந்தார்கள். செஞ்சி மஸ்தான் மைக் தர மறுத்து மேற்கொண்ட பேச முயற்சிக்கையில், ஆவேசமடைந்த பொன்முடி, செஞ்சி மஸ்தானிடம் இருந்து மைக்கை பிடுங்கினார். அதன் பின்னர், செஞ்சி மஸ்தானை கண்டபடி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்தார் நிகழ்ச்சி முடிந்த பின்னர், மேடையில் இருந்து கீழே இறங்கிய அமைச்சர் பொன்முடி, மீண்டும் ஒருமுறை கோபமாக திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். 

திமுக மோதல்


சமீபகாலமாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருக்கும் போது, விழுப்புரம் தொகுதியில் எந்த கட்சி நிகழ்ச்சியிலும் செஞ்சி மஸ்தான் பங்கேற்க கூடாது என மறைமுக உத்தரவு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், செஞ்சி மஸ்தானுக்கு இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. செஞ்சி மஸ்தானை நிகழ்ச்சியில் பார்த்து ஆத்திரமடைந்த பொன்முடி, பொது நிகழ்ச்சியிலேயே செஞ்சி மஸ்தானை திட்டியது, திமுக தொண்டர்களை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்துல இவங்களோட சொந்த பிரச்சனைகள் எல்லாம் தேவையா என்று மனவருத்தத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web