தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி காலமானார்... தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி சற்று முன் திடீர்னெ காலமானார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. புகழேந்தியின் திடீர் மரணம் திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.
முன்னதாக நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்த திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மயங்கி விழுந்த நிலையில், அரசு மாருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்கெனவே கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எல்.ஏ. புகழேந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற தகவல் இன்று காலை வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி புகழேந்தி காலமானார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!