சரிகிறதா திமுக பலம்... பல தொகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு!

 
தேர்தலுக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் தேர்தல் களம் களைக்கட்டியிருக்கும் நிலையில், கோடை துவங்குவதற்கு முன்பாகவே தலைவர்களின் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில், பல தொகுதிகளில் ஆளுங்கட்சியினர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

பல தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.பி., மீண்டும் அதே இடத்தில் தேர்தலில் நிற்பதால், தங்கள் பகுதிகளில் சுகாதார பிரச்சனைகள், அடிப்படை வசதிகள் கோரி மனு கொடுத்து மாதக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள், வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரும் போது, பொதுஇடத்தில் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறார்கள். தென்சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய சென்னையில் தயாநிதி மாறன் என  பொதுமக்கள் பிரச்சாரத்தின் போது தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


இந்நிலையில், திருவண்ணாமலை செங்குணம் கொள்ளைமேடு கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்காளர்கள்  இந்த தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தான் இந்த கிராமத்து மக்கள், செங்குணம் கிராமத்திற்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளது.


பலமுறை இது குறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்காததால், இம்முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் ஒட்டுமொத்த கிராமத்தினரும் சேர்ந்து (700 வாக்காளர்கள்) இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறி தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வைத்துள்ளனர். தங்களது வீடுகளின் மேற்கூரையில்,  “தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல” என பதாகைகளை எழுதி வைத்துள்ளனர் இந்த கிராமத்து மக்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web