தேர்தல் 2024 | நாளை கோவையில் முழுக்க முழுக்க பிரதமர் மோடி தமிழிலேயே பேச ஏற்பாடு... தொண்டர்கள் உற்சாகம்!

 
மோடி பிரச்சாரம்

நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி. கோவையில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் பிரதமர் மோடி, முழுக்க முழுக்க தமிழிலேயே பேசுவார் என்று தொண்டர்கள் ஆரவாரத்துடன் எதிர்பார்த்து  உற்சாகமடைந்துள்ளனர். அடுத்த முறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்களுடன் தமிழிலேயே பேச முயற்சி செய்வேன் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பேசியிருந்த நிலையில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பிரதமரின் பேச்சு புரியும் வண்ணம் தமிழிலேயே கொண்டு வருவதற்கான  முயற்சிகள் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தமிழகத்திற்கு இதுவரை பிரதமர் மோடி 5 முறை வந்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் பிரச்சாரமாக நாளை கோவை  வருகிறார். கோவையில் ரோடு ஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். 

மோடி
 பாஜகவை பொறுத்தவரை  பெண்களை முன்னேற்றும் அரசு,பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு . ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி   பெண்களை  அவமானப்படுத்தும் என்று பேசியிருந்த பிரதமர் மோடி, நாளை தமிழில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி

தமிழகத்தின் அன்பை  என்னால் உணர முடிகிறது. அதனால் தான் நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். என்னால் தமிழ் மொழியை தெளிவாக பேச முடியவில்லை. தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற குறை உள்ளது. இதனை  சரி செய்ய தொழில்நுட்பத்தின் துணையின் அடிப்படையில் இனி நான்  உங்களிடம்  தமிழ் மொழியில் பேசப் போகிறேன்.  அதன்படி நமோ செயலில் இனி தமிழிலும் வரவுள்ளது. அதில் உங்களிடம் என் குரலிலேயே, எந்த உணர்ச்சியில் நான் பேசுகிறேனோ அதே உணர்ச்சியில் தமிழிலேயே நான் பேச முயற்சிப்பேன்.  என் இந்த முயற்சி உங்கள் அன்பால் வெற்றி அடையும் என நம்புகிறேன்.” என கடந்த முறை பிரதமர் மோடி உருக்கமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web