தேர்தல் அட்ராசிட்டி... பாஜக எம்பி கார் மீது தாக்குதல்... தொண்டர்கள் அதிர்ச்சி!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் ராணாகாட் தொகுதியில் பாஜ எம்பி ஜெகன்னாத் சர்க்கார் போட்டியிடுகிறார். இவர் நேற்று நாடியா மாவட்டத்தில் உள்ள சக்டாகாவில் சென்று கொண்டிருந்த போது இவருடைய வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
"Bloodshed Returns in Bengal Politics before Lok Sabha Elections," tweets West Bengal LoP and BJP leader Suvendu Adhikari pic.twitter.com/uY5JtybIoP
— ANI (@ANI) March 24, 2024
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் திரிணாமுல் கட்சி தொண்டர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.இது குறித்து திரிணாமுல் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ்,‘‘பாஜ கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி மோதலால் உருவான இந்த திடீர் தாக்குதலால் அவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
அத்துடன் எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுப்பது உட்பட பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதிரியான பணிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார். சக்டாகா போலீஸ் அதிகாரி இது குறித்து சக்டாகா என்ற இடத்தில் பாஜ மற்றும் திரிணாமுல் தொண்டர்கள் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் இந்த மோதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை’’ எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!