கனிமொழி எம்பி காரில் பறக்கும்படை அதிரடி சோதனை!

 
கனிமொழி
 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

கனிமொழி


திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கனிமொழி

சமீபத்தில் நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தத் குறிப்பிடத்தக்கது .இதனையடுத்து  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் காரும் சோதனை செய்யப்பட்டது.  இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியின் கார் மறிக்கப்பட்டது.  தேர்தல் பறக்கும் படையினர் காரில் திடீர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி 3 வது மைல் தூரத்தில்  இந்த சோதனை நடத்தப்பட்டது. கனிமொழியின் காரில்  பணம் உட்பட  எந்தவிதமான பொருட்களும் இல்லை இதனையடுத்து   தொடர்ந்து செல்ல, பறக்கும் படை அதிகாரிகள் அனுமதித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web