வேகமெடுக்கும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள்... இன்று மாநில தலைமை அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை!

இந்நிலையில், தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையிலான தேர்தல் துறை, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களின் போது பிடிபட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கருத்தில் கொண்டு, 58 செலவின பார்வையாளர்கள் மற்றும் மாநில அளவில் செலவின பார்வையாளர்களையும் நியமித்துள்ளது. தமிழகத்துக்கான மாநில அளவிலான செலவினப் பார்வையாளராக கடந்த 1983-ம் ஆண்டுபணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த பி.ஆர்.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 11 மணி மற்றும் மாலை 3 மணி என இரு பிரிவாக, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சுங்கத்துறை, கலால்வரித் துறை, மாநில ஆயத்தீர்வைத் துறை. ஜிஎஸ்டி ஆணையர், வணிகவரித்துறை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முகமைகளின் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி முன்னிலையில், தேர்தல்செலவின பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது, தகவல் மற்றும் பணி ஒருங்கிணைப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியின் செயல்பாடு, ஒவ்வொரு துறையினரும் மேற்கொண்டு வரும்பணிகள், பணம், பரிசுப்பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று (ஏப்.3) மாலை 3 மணிக்கு, இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் காணொலி வாயிலாக நாடு முழுவதும் உள்ள மாநில தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து நாளை (ஏப்.4) தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் எஸ்பிக்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள், விளவங்கோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!