அட்ராசிட்டி.. மதுபாட்டில் சின்னம் ஒதுக்குங்க... கழுத்தில் தாலியுடன் வேட்புமனுத் தாக்கல்!

 
ஆறுமுகம்

 தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. அரசியல் களேபரங்கள், தேர்தல் அட்ராசிட்டிகள் தொடர்கின்றன. அந்த வகையில் செங்கல்பட்டில் கலெக்டரிடம்   தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில்  பொதுச்செயலாளர் ஆறுமுகம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்  கழுத்தில் தாலியுடன் வந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.  

ஆறுமுகம்

இது குறித்து அவர்   " நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பக்தி கூட்டணி, பகுத்தறிவு கூட்டணி மற்றும் தங்களது பார் கூட்டணிக்கும் தான் போட்டி நிலவுகிறது. மத்திய அரசு தான் மதுபான தயாரிப்பு ஆலைக்கு அனுமதி வழங்குகிறது. அதனால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இனி கடல் நீரில் மது தயாரிக்க வேண்டும். இளம் விதவைகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கல்

மதுபான கடைகளில் குடிநீர் டேங்க் வைக்க வேண்டும். மதுவினால் உயிரிழந்த குடும்பத்திற்கு ஜீவனாம்சம், இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். அனைத்து வகை மது பாட்டில்களுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். தங்களுக்கு மதுபாட்டில், டம்ளர், செருப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சின்னமாக ஒதுக்க வேண்டும்" என தமது  கோரிக்கைகளை வைத்தார். இவரது செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web