விறுவிறுப்படையும் வேட்பு மனு தாக்கல்... தமிழகத்தில் களைகட்டும் தேர்தல் திருவிழா!

 
வேட்பு மனு தாக்கல்
 

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நேற்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. சுயேச்சைகள், சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் வேட்புமனு தாக்கல்

திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27.  நடைபெறுகிறது. மார்ச் 28ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். மார்ச் 30ம் தேதி  மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற காலஅவகாசம் உள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேட்பு மனுத் தாக்கல்

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தமிழ்நாடு உட்பட  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் வேட்புமனு தாக்கல்   தொடங்கியுள்ளது.  முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அருணாச்சல பிரதேசம் (2), அசாம் (5), பிஹார் (4), சத்தீஸ்கர் (1), மத்தியபிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தராகண்ட் (5), மேற்கு வங்கம் (3) ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் (1), ஜம்மு காஷ்மீர் (1) லட்சத்தீவுகள் (1), புதுச்சேரி (1) ஆகிய யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்க தயாராகி வருன்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web