ஒவ்வொரு கிராமத்திலும் வெளிநாட்டு மதுபானக் கடைகள்.... தேர்தல் வாக்குறுதி கொடுத்த பெண் வேட்பாளர்!
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திராபூரில் சுயேட்சை எம்.பி., வேட்பாளர் வனிதா ராவத் என்பவர் வியப்பூட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த மக்களவைத் தேர்தலில் எம்.பி.,யாக வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மானிய விலையில் பீர், விஸ்கி வழங்கி வருவதாகவும் தனக்கு வாக்குசெலுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் பெண் வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு கிராமத்திலும் எம்.பி., நிதியில் வெளிநாட்டு மதுபானம், பீர் கொண்ட பார் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஏழைகளுக்கு மது அருந்துவது மட்டுமே ஆடம்பரம், அதனால் தான் அவர்களுக்கு இந்த திட்டம் தேவை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!