1500 குடும்பங்களுக்கு இலவச அறுவைசிகிச்சை.... தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விடும் அரசியல் கட்சிகள்!

 
பாரிவேந்தர்
 

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு இலவசமாக உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் பிரச்சாரத்தின் பொழுது உறுதி அளித்தார்.பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட் டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று / திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூனாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார் அதன்பின் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பாரிவேந்தர்


இதனைத்தொடர்ந்து அய்யம்பாளையம், திருவெள்ளறை, திருப்பைஞ் சீலி, சிறுகாம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாரிவேந்தர் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது…

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நல்லாட்சி செய்து வரும் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அவரது தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய நல்லவர்களை தேர்ந் தெடுக்கும் தேர்தல் இது. வழிபாடு நடத்தியபின், வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன் என்னை மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுத்தால் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும். மேலும் 1,500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சையை எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மூலம் வழங்கப்படும்.

பாரிவேந்தர்

தாமரையைத்தவிர வேறு எந்த சின்னத்திற்கு வாக்களித் தாலும், அது பயனற்றது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச் செயலாளர் ஜெயசீலன். முதன்மை செயலாளர் சத்யநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், திருச்சி மாவட்டதலைவர் செல்வகுமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க.. அ.ம.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web