களத்துல இறங்கியாச்சு... இன்று முதல் தமிழகம் முழுவதும் அண்ணாமலை சூறாவளி பிரச்சாரம்!

 
அண்ணாமலை
 இன்று முதல் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை. கோவை தொகுதியில் வேட்புமனு தாக்கல், முதல் கட்ட பிரச்சாரங்கள், தேர்தல் வியூகம், தொண்டர்களுடன் ஆலோசனை ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை, தன்னுடைய தொகுதி பணிகளை முடுக்கி விட்டு, இன்று முதல் தமிழகம் முழுவதும்  தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். நாளை மார் 29ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபடும் அண்ணாமலை, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து 30-ம் தேதி, சிதம்பரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சியிலும், 31-ம் தேதி கரூரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

அண்ணாமலை

தொடர்ந்து 31-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையில் தான் போட்டியிடும் கோவை தொகுதியில் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார். இதையடுத்து 4-ம் தேதி- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகரிலும், 5-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அண்ணாமலை

6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் மீண்டும் கோவையில் வாக்கு சேகரிக்கிறார். 9-ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலையிலும், 10-ம் தேதி நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சியிலும், 11-ம் தேதி கோவை, 12-ம் தேதி கோவை, நீலகிரியிலும் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதன் பின்னர் பிரசாரம் முடிவடையும் வரையில் கோவையிலே முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web