கல்லூரியில் பாஜக கட்சி கூட்டம்.. மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள சொன்னதால் பரபரப்பு...போராட்டம்!
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அதன்படி மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது மகன் துருவ் கோயலும் தனது தந்தையை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Students of Thakur College in Mumbai were forced to attend Dhruv Goyal, son of Union Minister Piyush Goyal session. The students say their ids were confiscated to ensure that they are compulsorily present when he speaks. What a shame! pic.twitter.com/qLmDKjV8yk
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) March 23, 2024
அந்த வகையில் மும்பை கண்டிவாலியில் உள்ள தாக்கூர் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, லோக்சபா தேர்தலுக்கு புதிய வாக்காளர்களை கவரும் வகையிலும், அதில் பா.ஜ.,வின் சாதனைகள் குறித்தும் பேச, கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் மத்திய அமைச்சர் மகன் துருவ் கோயலின் வேண்டுகோளை ஏற்று கல்லூரி நிர்வாகம் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கல்லூரி நிர்வாகமும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறாமல் இருக்க சாலை மறியலில் ஈடுபட்டு அடையாள அட்டைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் மத்தியில் அந்த மாணவர்களுக்கு மறுநாள் தேர்வு நடத்தப்பட்டது. அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கு சென்ற பிறகுதான் அது கட்சிக் கூட்டம் என்பது மாணவர்களுக்குத் தெரிய வந்தது.
இதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் முதல்வர் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!