முடியல... ராமநாதபுரத்தில் 5 ஓபிஎஸ் மனுக்களும் ஏற்பு!

 
ஓபிஎஸ்

 தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று மனுக்கள் மீதான பரிசீலணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் 5 ஓபிஎஸ்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதில்  தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக  அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சையாக தனி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தேர்தல் வேட்புமனு தாக்கல்
இவரை எதிர்த்து அதே பெயரைக் கொண்ட ஐந்து வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.இன்று நடந்த வேட்பு மனு பரிசீலணையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன்   5 பன்னீர் செல்வங்களின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும்! ஐகோர்ட்டு அதிரடி!

ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ததால் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இந்த விவகாரம் பேச்சுபொருளானது. ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை தடுக்கவே எதிர்கட்சிகள் பன்னீர்செல்வம் பெயருடையவர்களை தேர்தலில் நிற்க தூண்டுவதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும், ஓ.பி.எஸ்-ன் வெற்றியை தடுக்க முடியாது என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் முழக்கமிடுகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web