நமக்கு ஓட்டு போட்டா மட்டும் பணம் கொடு... மத்தவங்களைப் பத்தி கவலை வேண்டாம்... சர்ச்சையைக் கிளப்பிய அதிமுக வேட்பாளர்!

 
அதிமுக குமரகுரு

இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடுங்கள். மத்தவங்களைப் பத்தி கவலைப்பட வேண்டாம். பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க என்று செயல் வீரர்கள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுரு பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக  கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேர்தலில் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதில்,கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக ரா.குமரகுரு போட்டியிடுகிறார். 

அதிமுக

இவர் வேட்புமனு தாக்கல் செய்து, மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கூட்டணி கட்சியினரைச் சந்திப்பது, அதிமுக நிர்வாகிகளை சந்திப்பது, மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று வேட்பாளர் ரா.குமரகுரு கலந்து கொண்டார். அப்போது மக்களிடையே வாக்குசேகரிப்பது, அதிமுக கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளைச் செய்வது உள்ளிட்டவற்றை பேசினார். பின்னர், தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் நபர்களுக்கு பணம் விநியோகம் செய்வது தொடர்பாக பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது. அதுகுறித்த வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  
அதிமுக குமரகுரு

அதில், "இரட்டை இலைக்கு யார் யார் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று தெரியும். ஒவ்வொரு தெரு வாரியாக பெயர்களைப் பட்டியலிட்டு, நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடுங்கள். வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம். நமக்கு ஓட்டு போடாதவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். அவர்களைப் பற்றி கவலைப்படவும் வேண்டாம். இதை மனதில் வைத்து செயல்படுங்கள்" என்று தெரிவித்தார். இதையடுத்து ஓட்டுக்குப் பணம் கொடுங்கள் என பேசிய அதிமுக வேட்பாளர் குமரகுரு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web