பாஜக ஆட்சியில் குழந்தைகள் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறி தான்... சீறும் கனிமொழி!

 
கனிமொழி
 

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டிகள் நிலவுகின்றன. வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் சுழன்றடித்து சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக இளைஞர் மாநாடு

இந்நிலையில் கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்பாளருக்கு ஆதரவாக  திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கோவை கரும்புக்கடை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவரது உரையில்  இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறிதான்.

மோடிக்கு கடும் கண்டனம்! கனிமொழி எம்.பி ஆவேசம் !

இந்தியா முழுவதும் பொய் செய்திகளை பரப்புவதற்காகவும் , அதனை மக்களை நம்ப வைப்பதற்காகவும் பாஜக குழு ஒன்றை  தனியாக நியமித்துள்ளது. பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி, மத ரீதியான பிரச்னைகளை பாஜக ஏற்படுத்துகிறது. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி. கடும் நிதி நெருக்கடியிலும் திமுக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இது தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள் எனப் பேசியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web