பாஜக எத்தனை ரோடு ஷோ நடத்தினாலும் நோட்டாவை தாண்டமுடியாது... கனிமொழி விளாசல்!

 
மோடிக்கு கடும் கண்டனம்! கனிமொழி எம்.பி ஆவேசம் !

 தமிழகம் முழுவதும் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில்  திமுக வேட்பாளர் கனிமொழி விளாத்திகுளம் அருகே வேம்பாரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சார உரையில்  “தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் மக்களின் ஆதரவு முழுமையாக உள்ளதால் வெற்றி உறுதி என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல்  மோடி தலைமையிலான அரசு, தமிழகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியை சுரண்டி உ.பி. உட்பட பல  வட மாநிலங்களில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறது. மாறாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணத் தொகை கொடுப்பதற்கும், நமக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கூட தருவதில்லை. மக்களுக்கு தேவையான நிவாரணத் தொகையைகூட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  

கனிமொழி
விவசாயிகள் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தையும் கண்டு கொள்ளாத பாஜக அரசு யாருக்கும் உரிய உரிமையையும் சுயமரியாதையும் வழங்குவதில்லை. விவசாயிகள் பெற்ற கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர். அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கிலான கோடிகள் வரையில் கடன்களை தள்ளுபடி செய்கிறது .ஆனால் விவசாயிகள் கடனையோ, மாணவர்களுக்கான கல்வி கடனையோ பாஜக அரசு தள்ளுபடி செய்வதில்லை.
ஏழை மக்கள் பாதிக்கும் வகையில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்களுக்கு சம்பளத்தை கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்ததும் மக்களது வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் எனக் கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை எனக் கூறி மக்களின் பணத்தை பிடித்து வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ரூ21000கோடி  வரை வருவாய் கிடைத்துள்ளது.

நினைவுகளால் நிரம்பி வழிகின்றன கலைஞரின் கொஞ்சும் தமிழ்! கனிமொழி எம்.பி.  உருக்கமான ட்வீட்!
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு  பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார். எத்தனை ரோடு ஷோ நடத்தினாலும் பாஜவின் ஓட்டு எண்ணிக்கை நோட்டாவை தாண்டாது. தமிழ் மொழியைப் பற்றி பெருமையாக பேசும் பிரதமர் மோடி தமிழ் வளர்ச்சிக்கு போதிய நிதியை மட்டும் விடுவிப்பதே இல்லை.  பேச்சுவழக்கில் இல்லாத  சமஸ்கிருத மொழிக்கு பல மடங்கு அதிக பணம் ஒதுக்கீடு செய்கிறார். இப்படிப்பட்ட செயல்களை கூர்ந்து கவனித்து வரும் தமிழக மக்கள் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றி பெறச் செய்து மீண்டும் உங்களுக்கு பணியாற்ற வாய்ப்புகள் வழங்க வேண்டும்.  உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web