கள்ளுக்கடைகளை திறப்போம்.... டாஸ்மாக்கை மூடுவோம்... அண்ணாமலை சர்ச்சை பேச்சு!
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், கோவை ஆனைக்கட்டி பகுதியில் பாஜக மாநிலத் தலைவரும், அக்கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “குடியினால் எல்லோருக்கும் பிரச்சினை ஏற்படும். கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம். தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்றி கள்ளுக்கடைகளை திறப்போம். டெல்லிக்கு போகும் ஒரே வண்டி இந்த வண்டிதான். மற்றவை எல்லாம் லோக்கல் வண்டி.” என பேசினார். இந்தியா முழுவதும் மோடி பழங்குடி மக்களின் பாதுகாவலனாக இருக்கிறார். கோவையில் திறந்தவெளி வாகனத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். தாமரையில் வாக்களிக்கும் படி தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும், ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் மக்களைச் சென்றடைய வேண்டுமானால், அது பாஜக பாராளுமன்ற உறுப்பினரால்தான் முடியும். கோயம்புத்தூரைப் பொறுத்தவரை, வாக்குகளுக்குப் பணம் கொடுப்பதில்லை என்ற முடிவோடு, மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, பொதுமக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எதிர் நோக்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவரும் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!