தி கேரளா ஸ்டோரி Vs மணிப்பூர் ஸ்டோரி | பாஜகவுக்கு பதிலடி கொடுத்த பாதிரியார்கள்!

 
மணிப்பூர் ஸ்டோரி

மதமாற்றத்தை மையக் கருவாக கொண்ட  'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளத்தில் திரையிடப்படுவதற்கு அம்மாநில முதல்வர்  பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் அதையும்மீறி  இடுக்கி மறைமாவட்டத்தில் உள்ள ஜீரோ மலபார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜீன்ஸ் காரக்கட் என்பவர் மூலம் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் முதன்முறையாக திரையிடப்பட்டது.

இது தொடர்பாக கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்ததால், இந்த படத்தை திரையிடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதைமீறி கண்ணூர் மறைமாவட்டத்தில் உள்ள செம்பண்தொட்டி தேவாலயத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படம் திரையிடப்பட்டது. இதே போல் எர்ணாகுளத்திலும் சில தேவாலயங்களில் 'தி கேரளா ஸ்டோரி' திரையிடப்பட்டது.  

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளால் இந்தத் திரையிடல்கள்  ஏற்பாடு செய்யப்பட்டது.  இதனால் அப்போது கேரளாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.   

மணிப்பூர் ஸ்டோரி

இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்திற்குப் போட்டியாக தற்போது  மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான ஆவணப்படம் கேரளாவில் திரையிடப்படுகிறது. எர்ணாகுளம் அங்கமாலி மறை மாவட்டத்தின் கீழ் செயல்படும் சான்ஜோபுரம் தேவாலயத்தில் நேற்று  மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்  திரையிடப்பட்டது. தேவாலயத்தில் விடுமுறை காலத்தில் இறை நம்பிக்கை பயிற்சிக்கு வருபவர்களுக்கு ‘மணிப்பூர் ஸ்டோரி’ ஆவணப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படமான 'மணிப்பூர் ஸ்டோரி' கேரள மாநிலத்தில் தேவாலயத்தில் திரையிடப்படுவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

மணிப்பூர் ஸ்டோரி

 

மணிப்பூரில் கலவரத்தை தடுப்பதில் மணிப்பூர் அரசு படுதோல்வி அடைந்து உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் அதுகுறித்த ஆவணப்படம் திரையிடப்படுவது பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதத்தில்  மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படம் திரையிடப்படுவதால் அங்குள்ள பாஜகவினர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.  இது கேரளா அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்