மதிமுக கணேசமூர்த்தி காலமானார்... கோவை புறப்பட்டார் வைகோ!

 
கணேசமூர்த்தி  மதிமுக ஈரோடு
கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு எம்.பி., கணேச மூர்த்தி, இன்று அதிகாலை 5.15 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.  அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கணேச மூர்த்தி காலமான செய்தி கேட்டு விமானத்தில் கோவைக்கு விரைகிறார் வைகோ. இன்று காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு செல்கிறார்.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராமல், தனது மகன் துரை வைகோவுக்கு வாய்ப்பு வழங்கிய நிலையில், ஈரோடு தொகுதி மீண்டும் வழங்கப்படாததாலும், குடும்பப் பிரச்சினையின் காரணமாகவும் விஷம் குடித்து கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயற்சித்தார்

ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி

1993ல்  திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வைகோ தனியாக பிரிந்து வந்து மதிமுக கட்சியை தொடங்கிய போது  ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த கணேச மூர்த்தி வைகோவுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார். இவர் 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். கட்சி தலைமை கணேசமூர்த்தி இந்த முறை நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட  சீட் ஒதுக்கவில்லை.

கணேச மூர்த்தி

எனவே மதிமுக தலைமையுடன் அவர் மனக்கசப்பில் இருந்து வந்தார்.  அதே நேரத்தில்  குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக  ஞாயிற்றுக்கிழமை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. உயிர் காக்கும் கருவிகளுடன் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் சுயநினைவில்லாமல் இருந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை 5.15 மணிக்கு கணேச மூர்த்தி காலமானார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web