திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி... எம்எல்ஏ பொன்னுசாமி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ., பொன்னுசாமி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சனிக்கிழமையன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார் திமுக எம்.எல்.ஏ., பொன்னுசாமி. இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதையடுத்து, நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நெஞ்சுவலிக்கான முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தமிழகம் முழுவதும் அமைச்சர்களும், திமுக பிரமுகர்களும், தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து அமைச்சரும், எம்.எல்.ஏ.,வும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!