மீண்டும் ஒரு ரோடுஷோ... ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் 6 வது முறையாக தமிழகம் வருகை!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான தொகுதிகளைப் பிடிக்க வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடி சென்னை, கோவை, சேலம், மதுரை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். கோவையில் இரண்டரை கிலோமீட்டருக்கு பேரணி (ரோடு ஷோ) நடத்தினார்.
மீண்டும் ஆதரவு திரட்டும் வகையில், ஆரணி, பெரம்பலூர் இவ்விரு தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. அதேபோன்று. வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் அருகே பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நிகழ்ச்சிக்குப் பிறகு அன்றைய தினமே வேலூர், பெரம்பலுார் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பிரச்சாரக்களம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் தேசிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக இங்கு பிரச்சாரத்துக்கு படையெடுக்க இருக்கின்றனர். அந்த வகையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி 9ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அவர் சென்னை மட்டுமின்றி வேலுார், பெரம்பலுார் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான திட்டம் தயாராகி வருகிறது.
இவ்வருகையின்போது, சென்னையில் பிரதமர் மோடி பேரணியும் (ரோடு ஷோ) நடத் துகிறார். இந்தப் பேரணி, தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவதாக அமைய திட்டமிட்டுள்ளார், அதேபோல இம்முறை வாரிசு அரசியல் கச்சதீவு விவகாரம் ஆகியவை குறித்தும் பேசுவார் என்கிறார்கள், பிரதமர் ரோடு அமித்ஷா, ராஜ்நாத் சிங் வருவதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனராம்,