பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டணை... நாம் தமிழர் தேர்தல் அறிக்கை!

 
சீமான்
 

தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக என 4 முனை போட்டிகள் மக்களவை தேர்லில் களம் காணுகின்றன. அனைத்து கட்சிகளும் மும்மூரமாக  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் எந்த அணியுடன் அணி சேராமல்  நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  வெளியிட்டுள்ளார்.  
மக்களவை தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. இத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சீமான் இன்று வெளியிட்டார்.

சீமான்
சீமான் வெளியிட்ட நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் 32 தலைப்புகளில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 84 பக்கங்களைக் கொண்ட இத்தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்  

1. காங்கிரசும் பாஜகவும் வெவ்வேறல்ல!
2. மாநில உரிமைகளை அடகு வைத்த திமுக, அதிமுக
3. நாடாளுமன்றத்தில் நாம் தமிழர்
4. அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்
5. தன்னாட்சியும் கூட்டாட்சியும்
6. மக்களாட்சிக்கு எதிரானவை
-குடியரசுத் தலைவர்
-மாநிலங்களவைச் சீர்திருத்தம்
-ஆளுநர்
-சட்டப்பிரிவு 356 நீக்கம்
-தொகுதி மறுசீரமைப்பு
7. தேர்தல் சீர்திருத்தம்
-சின்னம் இல்லாத தேர்தல்
-வாக்கு இயந்திரத்திற்குத் தடை
-ஊழல் செய்பவர்களுக்குத் தேர்தலில் தடை
-பரப்புரை முறைமைச் சீர்திருத்தம்
-இரு தொகுதிகளில் போட்டியிடத் தடை
-வாக்களிப்பது மக்களின் கடமை
-அயல்நாடு வாழ் இந்தியக் குடிமக்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு
-சிறைக்கைதிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு
-இடைத்தேர்தல் முறையை ஒழிப்போம்
-மற்ற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடத் தடை
8. தொகுதி மேம்பாட்டு நிதியை வீணடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
9. நீதித்துறைச் சீர்திருத்தம்
-உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும்
-ஒரே வழக்கிற்கு மாறுபட்ட தீர்ப்புகள்
-மண்ணின் மைந்தர்களே நீதியரசர்கள்
-தமிழே தமிழ்நாட்டின் வழக்காடு மொழி
-அரசுப் பதவிகளில் ஓய்வு பெற்ற நீதியரசர்கள்
-இந்தியத் தண்டனைச் சட்டப் பெயர்மாற்றம்
10. பொறுப்புடைமை உரிமை
11. பெண்ணும் ஆணும் சமம்
-பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை
-மகளிர் இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம் 2023
12. மணிப்பூர் வன்முறை
13. தேசிய இனங்களுக்கு எதிரானவை
-காஸ்மீர் - பிரிவு 370 நீக்கம்
-கச்சத்தீவு
-வடமாநிலத்தவர் குடியேற்றம்
14. சாதி, மதவெறியைத் தூண்டும் வெறுப்பரசியல்
15. நாம் தமிழர் கட்சி எதிர்க்கும் சட்டங்கள்
-குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிகிகி), தேசிய மக்கள்தொகைப்
பதிவேடு (ழிறிஸி), தேசியக் குடியுரிமைப் பதிவேடு
-தேசியப் புலனாய்வு முகமைத் (ழிமிகி) திருத்தச் சட்டம்
-முத்தலாக் தடைச் சட்டம்
-பொது உரிமையியல் சட்டம்
-பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு
-வேளாண் சட்டங்கள்
-கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறை

சீமான்


16. நாம் தமிழர் கட்சி எதிர்க்கும் திட்டங்கள்
-தேர்தல் நன்கொடைத் தளை
-முதன்மை அமைச்சர் பேரிடர்க்கால நிதி
-அக்னிபாத்
17. பணமதிப்பு நீக்கம் என்ற மோசடி
18. சரக்கு மற்றும் சேவை வரி
19. தனியார்மயம் தாராளமயம் உலகமயம்
-பாதுகாப்புத்துறையில் தனியார் மற்றும் அயலக முதலீடு
20. தற்சார்புப் பசுமைத் தாய்மைப் பொருளாதாரம்
-பொருளாதாரக் குற்றங்கள்
-பொருளாதாரக் குற்றங்களுக்கான தீர்வுகள்
21. நீர்வளப் பெருக்கம்
-நீர்ப் பங்கீட்டுக்கான தீர்வுகள்
-நீர் என்பது பொதுவுடைமை
22. மீனவர்கள் நலன்
23. வேளாண்துறையில் புரட்சி
-கால்நடை வளர்ப்பு
24. அறிவை வளர்க்கும் கல்வி
-கல்வி முறை மாற்றம்
-கல்வி - மாநில உரிமை
-நுழைவுத்தேர்வு முறை ஒழிப்பு
-ஆளுநர் வேந்தரன்று
-தேசியக் கல்விக் கொள்கை
-ஒன்றிய அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதி
25. மருத்துவத்துறையில் புரட்சி
-மரபு மருத்துவ முறைகள்
-சிற்றூர்களின் மருத்துவக் கட்டமைப்பு
-மருத்துவக் கழிவு மேலாண்மை
26. போக்குவரத்துத்துறையில் மாற்றம்
-சுங்கவரி நீக்கம்
-தமிழர்களுக்கே முன்னுரிமை
-நெய்தல் பாதுகாப்பு
-துறைமுகம் மற்றும் வானூர்தித் துறைகளில் மாநில அரசுகள்
27. மாற்று மின் பெருக்கம்
28. பேரழிவுத் திட்டங்கள்
-நீரகக்கரிமத் திட்டம்
-நரிமணம் எண்ணெய் தூய்மையாக்கல் (சுத்திகரிப்பு) நிலையம்
-பரந்தூர் வானூர்தி நிலையம்
-அதானி துறைமுக விரிவாக்கம்
-சாகர்மாலா திட்டம்
-கூடங்குளம் அணுமின் நிலையம்
-கல்பாக்கம் ஈனுலை
-எண்ணூர் அனல்மின் நிலையம்
-கேரள மருத்துவக் கழிவு
-கனிம வளக்கொள்ளை
-சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை
-இயற்கைப் பேரழிவுச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
29. காலநிலை மாற்றம்
30. ஈழம் எங்கள் இனத்தின் தேசம்
31. விடுதலைப் புலிகள் - தடை நீக்கம்
32. எழுவருக்கான முழு விடுதலை

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web