நாம் தமிழர் வேட்பாளர் மயக்கம்... வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது களேபரம்!

 
சத்தியாதேவி

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மக்களவைத் தொகுதியில்  இன்று சுயேச்சை வேட்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக  வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தனர்.  இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவி, தனது கட்சியினருடன் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். தமுக்கத்தில் உள்ள தமிழ் அன்னை சிலை,  திருவள்ளுவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரபாகரன் படத்தை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

சத்தியாதேவி
ஆட்சியர் அலுலவலகம் அருகே வந்தபோது, திடீரென்று அவருக்கு மயங்கி தரையில் அமர்ந்து விட்டார். சக கட்சி தொண்டர்கள்  அவருக்கு தண்ணீர் கொடுத்து, நெற்றியில் திருநீறு பூசிவிட்டனர். அதன்பிறகு அவரை மெதுவாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்று ஆட்சியர் சங்கீதாவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்தனர்.

BREAKING! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மாற்று வேட்பாளராக கண்மணி வேட்புமனு தாக்கல் செய்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன், கிழக்கு மண்டல செயலாளர் அப்பாஸ், மேற்கு மண்டல செயலாளர் சிவானந்தம், வழக்கறிஞர் பாசறை விக்னேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்பாளர் சத்தியாதேவி, ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வரும் போதே  சோர்வுடன் காணப்பட்டதாகத் தெரிகிறது. கோடை வெயில் தற்போது மதுரையில் அதிகமாக அடிக்கும் நிலையில் இந்த வெயிலில் அவர் தாக்குப்பிடிக்க முடியாமல் அயர்ந்து கீழே அமர்ந்துவிட்டதாக கட்சியினர் விளக்க அளித்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web