நீட் தேர்வு கட்டாயம் இல்லை... வைரலாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

 
நீட்

 மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நீட், க்யூட்  தேர்வுகள் குறித்தும், இடஒதுக்கீடு குறித்தும் கூறியிருப்பது தமிழக மக்களிடையே பெரும் கவனம் ஈர்த்துள்ளது.  இத்தேர்தலில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது.  இன்று தனது தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.   நீட், கியூட்  தேர்வுகள் குறித்தும், இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

தமிழகத்தில் நீண்ட நாட்கள் கோரிக்கையாக நீட் தேர்வு ரத்து  இருந்து வருகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது.ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது. நீட்  நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும்.   
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  நீட், கியூட் உட்பட  தேர்வுகள் மாநிலத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது. மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல இடஒதுக்கீடு உச்சவரம்பு 50%லிருந்து உயர்த்தப்படும் எனவும், காங்கிரஸ் அறிவித்திருப்பது தமிழக மக்களிடையே கவனம் பெற்றுள்ளது 

காங்கிரஸ்


அரசு பணிகளில் எந்தெந்த சாதியினர், எவ்வளவு பேர் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் உத்தரவு.  தமிழ்நாடு, கடந்த சில ஆண்டுகளாகவே 50% ஆக இருக்கும் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வந்தது.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பழங்குடியினர், பட்டியல், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வரும். இவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் இடஒதுக்கீடு சதவிகிதம் போதாது. இந்நிலையில், 50% ஆக இருக்கும் இடஒதுக்கீடு உச்சவரம்பை   ஆட்சிக்கு வந்தால் உயர்த்துவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தமிழகத்தில் வரவேற்பை பெறலாம் எனத் தெரிகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web