தன்பாலின திருமணத்திற்கு புது சட்டம்... கல்வி கடன் ரத்து... இலவச கல்வி.. கவனம் ஈர்க்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

 
காங்கிரஸ் சோனியா
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து குறித்து பரிசீலனை, ஏழைக் குடும்பங்களுக்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம், சாதி வாரி கணக்கெடுப்பு என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வைரலாகி வருகிறது. 

இன்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து வெளியிட்ட தேர்தல் அறிக்கை சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. 

காங்கிரஸ்

தேர்தல் அறிக்கையில், 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற வரம்பு அரசியல் சாசனம்  திருத்தப்படும்,  பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் அனைவருக்கும் 10% இட ஒதுக்கீடு, அரசு பணி  தேர்வுகளுக்கான விண்ணப்ப கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும், ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை இலவச கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.

காங்கிரஸ்

தன்பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க புதிதாக சட்டம், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை திருத்தம் செய்யப்படும், நாடு முழுவதும் மாணவர்கள் வாங்கியுள்ள கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், கல்விக்கடன் உச்சவரம்பு 7.5 லட்சம் ஆக உயர்த்தப்படும், 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் நாள் ஒன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பாலின பாகுபாடு இல்லாமல் சமவேலைக்கு சம ஊதியம், ஜம்மு, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உட்பட மேலும் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web