பாஜகவின் கனவு சான்ஸே இல்லை... பிரசாந்த் கிஷோர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், செல்லும் இடங்களில் எல்லாம், பாஜக 400 இடங்களை வெல்லும் என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். மோடி குறிப்பிட்ட 400 எம்பிக்களில் தங்கர்பச்சானும் ஒருவர் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் 400 இடங்களில் வெல்வது உறுதி என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.ஆனால், தேர்தல் பிரச்சாரகர், அரசியல் கள ஆய்வாளர் பிரஷாந்த் கிஷோர், பாஜக 370 இடங்களில் எல்லாம் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
பாஜக தனியாகவே 370 இடங்களைக் கைப்பற்றும் என்று அந்த கட்சியின் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலமாக எளிதில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 400 இடங்களைக் கைப்பற்றலாம் என்று பாஜக கணக்கு போட்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆலோசகர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்தாலும், தனியாக பாஜக மட்டுமே 370 இடங்களைக் கைப்பற்றுவது எல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று என்கிறார்கள்.
இது தொடர்பாக தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பாஜக தனித்து எல்லாம் 370 தொகுதிகளில் வெல்வதற்கான வாய்ப்புகளே இல்லை. அவர்கள் இந்த நம்பரை திரும்ப திரும்ப சொல்ல காரணம் உளவியல் விஷயம். இந்த பிரச்சார யுக்தி எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியான அடியாகும். கடந்த முறை வாங்கியதை விட கூடுதலாக பாஜக 10 முதல் 20 இடங்கள் வரை வென்றால் ஆச்சர்யம்தான். கண்டிப்பாக 60 இடங்களில் எல்லாம் கூடுதலாக வெல்வதற்கு வாய்ப்புகளே இல்லை” என்கிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!