மடியேந்தி பிச்சை கேட்கிறேன்... ஓட்டு போடுங்கம்மா... ராதிகா சரத்குமார் நூதன வாக்கு சேகரிப்பு!

 
ராதிகா சரத் குமார்

 தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன. கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் களையெடுத்து, வெங்காயம் அள்ளிப்போட்டு, மூட்டை தூக்கி, பல்லை காட்டி, கல்லைக்காட்டி விதவிதமான முறைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் , நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராதிகா சரத் குமார்

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.  இதனையடுத்து விருதுநகர் மாவட்டம், கப்பலூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில்  ராதிகா சரத்குமார் வாக்கு சேகரித்தார்.   ஏப்ரல் 19ம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இப்போது  நீங்கள் சொல்வதை செய்யும் இடத்தில் இருக்கிறேன். திமுககிட்ட எந்த பிரதமர் வேட்பாளர் என முடிவே செய்யவில்லை.  அதிமுகவிடம் மத்திய மாநில அரசுகளுடன் கூட்டணியே இல்ல. அதனால அவங்களால உங்களுக்கு தேவையானதை செய்ய முடியாது. ஆனால் ராதிகா சரத்குமாராகிய நான் உங்களுக்கு தேவையானத  மாநில தலைவர் அண்ணாமலைகிட்ட சொல்லி  பிரதமரிடம் கூறி அதனை நிறைவேற்றுவேன்.

சரத்குமார் ராதிகா

அதனால் தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் கிழக்கு சீமையிலே படத்தில் ராதிகா ஏற்று நடித்து இருந்த விருமாயி கதாபாத்திர வசனத்த சொல்ல சொன்னார் .அதை ராதிகா கூறியதும் கைதட்டல்களும், விசில் சத்தங்களும் பறந்தன. இதனையடுத்து அருகில் இருந்த கணவர் சரத்குமாரிடம், மாமா இந்த மைக்கை பிடியுங்க எனக் கூறி  மடியேந்தி, நான் உங்களுக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இன்னும் என்னிடம் உயிர் மட்டும் தான் இருக்கிறது. அதையும் உங்களுக்காக தரத் தயாரா இருக்கேன். ” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web