நெல்லை குலுங்குது... மழையும் வரவேற்குது... ராகுல்காந்தியின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம்... நிகழ்ச்சி திட்டம் என்ன?

 
ராகுல்

இன்று நெல்லைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி வரவிருக்கும் நிலையில், நெல்லை, தென்காசி பகுதிகளில் மழை பெய்துள்ளது. கடந்த சிஅல் நாட்களாக தொடர் வெயில் காரணமாக அவதிப்பட்டு வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லையில் பிரதமர் மோடி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்த நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, தென்காசி வேட்பாளர் ராணிஸ்ரீகுமார், மதுரை வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் வேட்பாளர் மாணிக் தாகூர், சிவகங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.  

ராகுல் காந்தி

இன்று நெல்லை வரும் ராகுல்காந்தி மாலை 3.50க்கு ஹெலிகாப்டரில் பெல் மைதானம் அருகே உள்ள விமான தளத்தில் வந்து இறங்குகிறார். தொடர்ந்து அங்கிருந்து பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிராக 500 மீ தொலைவில் இருக்கும் பெல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தருகிறார். அங்கு 4 மணிக்கு முதல் 5 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரச்சார உரை நிகழ்த்துகிறார்.

ராகுல்காந்தியின் வருகையையொட்டி, தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளையம் மற்றும் நெல்லை டவுண் வழியாக வரும் வாகனங்கள் பாளையங்கோட்டை மார்க்கெட் வழியாக சீவலப்பேரி ரோடு - ஜேஆர் மஹால்-சாந்தி நகர் சென்று திம்மராஜபுரம் பெருமாள் கோவில் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும். கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக வரும் வாகனங்கள் சாந்தி நகர், ரஹ்மத் நகர் சாலையில் ஹமாஸ் லைட் வழியாக திம்மராஜபுரம் செல்லும்.

அதே போல தாழையூத்து, சங்கர் நகர் வழியாக வரும் வாகனங்கள் மாவட்ட நீதிமன்றம் வழியாக திம்மராஜபுரம் பெருமாள்கோவில் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராகுல்

நெல்லை மாநகர் முழுவதும் 13ம் தேதி நாளை காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராகுல் காந்தி பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் தண்ணீர் வாட்டர் பாட்டில் மற்றும் பைகள் எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web