சுவர் ஏறி குதித்து ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கி குடுத்த ராகுல் காந்தி! வைரல் வீடியோ!

 
சுவர் ஏறி குதித்து ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கி குடுத்த ராகுல் காந்தி

கோவையில் ஸ்டாலினுக்காக ராகுல் காந்தி இனிப்பு வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிம் வருகிறது. 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை செட்டி பாளையம் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். இதில் தமிழக முதல்வர்  ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


 

 

 பிரச்சாரத்திற்கு வரும் வழியில் முதல்வர் ஸ்டாலினுக்காக ஒரு கடையில் இனிப்பு வாங்கும் வீடியோவை ராகுல் காந்தியை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  சிங்காநல்லூர் பகுதியில் சாலை தடுப்பு சுவரைத் தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குள் நுழையும் ராகுல் காந்தி அங்குள்ள ஊழியர் ஊழியர்கள் , கடை உரிமையாளர் ஆகியோருடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.  இதை தொடர்ந்து யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் சார் என்று கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கேட்க எனது சகோதரர் ஸ்டாலினுக்காக என்று ராகுல் காந்தி பதிலளிக்கிறார். கடையின் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடை பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி கோவை பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை  முதல்வர் ஸ்டாலினிடம்  கொடுத்து அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். 

 

ஸ்டாலின் ராகுல் காந்தி


 
தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்திற்கு கொஞ்சம் இனிமையை சேர்க்கிறேன். என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக சிறிது மைசூர் பாகு வாங்கினேன் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web