நாளை ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல்!

 
ராகுல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக ஏப்ரல்19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இரண்டாவது கட்டமாக கேரளாவில் ஏப்ரல் 26 ம் தேதி  ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவை பொறுத்தவரை  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக  கட்சி வேட்பாளர்கள்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் மோடி

ஏப்ரல்    26 ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உட்பட மாநிலங்களில்  வேட்பு மனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை பிற்பகல் 12 மணிக்கு  வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.  சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. கேரள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிட உள்ளார்.  

தேர்தல் வேட்புமனு தாக்கல்

இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் “தாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் வயநாட்டில் ராகுல்காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது ஒரு மெகா ரோடு ஷோ மற்றும் பேரணி நடத்தப்படும். கடந்த தேர்தலில்  19 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.  ராகுல் காந்தி 2019 தேர்தலில், வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web