தமிழ்நாடு மலர தாமரைக்கு ஓட்டுப் போடுங்க... ராதிகா சரத்குமார் சூறாவளி பிரச்சாரம்!

 
ராதிகா சரத் குமார்

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்குகிறது.  அந்த வகையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சரத்குமார் ராதிகா

அங்கு தேர்தல் பிரச்சாரத்தில்   “விருதுநகர்  மாவட்டத்தில்  சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளது. சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் பெற்றோர்கள் உடல்நிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. இந்நிலை மாற்ற  தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். தாமரை மலர்ந்தால் இந்த விருதுநகரும் மலரும்.   மாற்றி மாறி 2 திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து தமிழகத்தை அழித்து விட்டார்கள். ஆகவே என்னை தங்கையாக, தோழியாக, சித்தியாக நினைத்து எனக்கு ஒரே ஒரு  வாய்ப்பு கொடுங்க.  தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

கட்சியைக் கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார் சரத்குமார்!

ராதிகாவுக்கு ஆதரவாக பேசிய அவரது கணவரும் நடிகருமான  சரத்குமார், “சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும் எனில் பொதுமக்களாகிய நாம்தான் முதலில் மாற வேண்டும். கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு பணம் கொடுத்தால், நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை நாம்தான் தகர்க்க வேண்டும். நாளைய சந்திதி நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
ஓட்டு விற்பனைக்கு அல்ல என்பதை திராவிட கட்சிகள் உணர்ந்தால்தான், தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கும். அந்த காலம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது. மீண்டும் பாரத பிரதமர்  மோடி 3வது  முறையாக பிரதமராவதற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து ராதிகா சரத்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என பேசியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web