அதிர்ச்சி... மதிமுக எம்.பி., தற்கொலை முயற்சி?! மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

 
கணேசமூர்த்தி  மதிமுக ஈரோடு

தமிழகத்தில் அடுத்த மாதம் மக்களவைத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், ஈரோடு எம்.பி, மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளதால், மதிமுகவினரிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கடந்த 2019ல் கணேசமூர்த்தி என்பவர், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.பியாக பதவி வகித்து வந்தார். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு அங்கு துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி

இதனால் கணேசமூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கணேசமூர்த்தி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கட்சியில் ஏற்பட்ட விவகாரங்கள் காரணமாக கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த தகவலை இதுவரை அவரது உறவினர்களோ, அல்லது கட்சியினரோ உறுதி செய்யவில்லை.

இதன் காரணமாக மதிமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 1993-ம் ஆண்டு மதிமுக உருவானதில் இருந்து அக்கட்சியில் இணைந்திருந்த கணேசமூர்த்தி, கடந்த 201-6ம் ஆண்டு முதல் கட்சியின் பொருளாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web