அதிர்ச்சி... ரூ.8 கோடி ரொக்கம் பதுக்கல்... சென்னை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

 
வருமான வரித்துறை சோதனை

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக கோடிகளில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், நேற்று சென்னை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பணம் சோதனை

சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தொழிலதிபர் ஒருவரின் வீடு, கொண்டித்தோப்பு பகுதியில் வடமாநில தொழிலதிபர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சென்னை கொரட்டூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.2.50 கோடி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்து நிறுவனம் நடத்தி வரும் சந்திரசேகரனுக்கு சொந்தமான நிதி நிறுவனங்கள், பள்ளிகள், வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் சுமார் ரூ.4.50 கோடி ரொக்க பணத்தை கைப்பற்றினர். அதே போன்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகர அதிமுக செயலாளரான கவுன்சிலர் பாலசுப்பிரமணியத்தின் வீடு, அவருக்கு சொந்தமான நகைக் கடைகள் ஆகியவற்றில் சோதனை செய்து  ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web