ஷாக் போட்டோஸ்... தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு திமுக, அதிமுக பணப்பட்டுவாடா !

 
தேனி

 
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  நேற்றுடன், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்  அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 62 வேட்பாளர்கள்   வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  சில இடங்களில்  பணப்பட்டுவாடா செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தேனி
தேனி மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர். தேனி அதிமுக வேட்பாளர்   நாராயணசாமி.  இவர் இன்று  சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் பகுதிகளில் வீடுவீடாக  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நாராயணசாமி, பல்வேறு கிராமங்களில்  பிரச்சாரம் மேற்கொண்டார். கல்லணை பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் நிறைவடைந்ததும்  அதிமுக நிர்வாகி, பெண்களை வரிசையாக நிறுத்தி பணப்பட்டுவாடா செய்தார்.  பிரசாரத்திற்கு 5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ள சூழலில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றது குறிப்பிடத்தக்கது.  

திமுக அதிமுக

அதே நேரத்தில்  திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது, அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  பணம் கொடுக்கப்பட்டதாக வீடியோ வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் பரப்புரையின்போதும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web