கோட்டை பைரவர் கோயிலில் விசேஷ வழிபாடு... ரோடு ஷோ முதல் பொதுக்கூட்டம் வரை... அமித்ஷாவின் முழு பயண திட்டம்!

 
அமித்ஷா
 மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம், கோட்டை பைரவர் கோயிலில் விசேஷ வழிபாடு, ரோடு ஷோ முதல் பொதுக்கூட்டங்கள் வரை இரண்டு நாட்கள் தமிழகத்தில் வலம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.பிரதமர் மோடி, அடுத்தடுத்து தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் மேகொண்ட நிலையில், மத்திய  உள்துறை அமைச்சர்  அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரோடு ஷோ, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.

அமித்ஷா


இரண்டு நாள் பயணமாக நாளை மதியம் 3.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார். சிவகங்கையில் பாஜக வேட்பாளரை  ஆதரித்து ரோடு ஷோவில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். ரோடு ஷோ முடிந்ததும், அங்கிருந்து  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  செல்லும் அமித் ஷா, கோட்டை பைரவர் கோயிலில் விசேஷ வழிபாடு மேற்கொள்கிறார். பின்னர்  மாலை 5 மணிக்கு தரிசனம் செய்து விட்டு, மாலை 6 மணிக்கு மதுரை செல்கிறார். 
மதுரையில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக 2 கி.மீ. தூரம் ரோடு ஷோவில் பங்கேற்று விட்டு, இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். நாளை இரவு  மதுரையில் தங்கி விட்டு, நாளை மறுதினம்  காலை 8 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் தக்கலை செல்கிறார்.  தக்கலையில் காலை 9.50 மணிக்கு கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ முடிந்ததும், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி வந்து, திருவாரூர் செல்கிறார்.  

அமித்ஷா


நாகையில் சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, நாகை தொகுதி பாஜக வேட்பாளர்  எஸ்.ஜி.எம். ரமேஷுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். பின்னர், தென்காசி மாவட்டம் இலஞ்சி செல்கிறார். அங்கு புதிய பேருந்து நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவில் பங்கேற்று தென்காசி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவு பிரச்சாரம் மேற்கொல்கிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். 
மோடி தமிழகத்தில் அடுத்தடுத்து ரோடு ஷோ நடத்திய நிலையில், தற்போது அமித் ஷாவின் ரோடு ஷோ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைவர்களின் ரோடு ஷோ தமிழகத்தில் எடுபடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றாலும், தமிழில் பேசத் தெரியாத நிலையில், பாஜக தேசிய தலைவர்களின் கைகளை மட்டுமே அசைத்துச் செல்லும் இந்த பிரச்சார யுத்தி பாஜக தொண்டர்களுக்கு  புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web