ஏப்ரல் 12ம் தேதி ராகுல் , ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம்... தேர்தல் அட்ராசிட்டி!

 
ராகுல் ஸ்டாலின்

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ம்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிக்ளுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை  பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் திமுக காங்கிரசுடன் இணைந்து களம் காண்கிறது.   

ஸ்டாலின் ராகுல்

கோவையில் ஏப்ரல்12ம் தேதி தமிழக முதல்வர்  ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக  ஏப்ரல்12-ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகிறார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.  

தேர்தல்
இது குறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின்,  மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இருவரும் இணைந்து ஏப்ரல் 12ம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.   இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, செட்டிபாளையம் L&T பை-பாஸ் ரோடில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web