ஆந்திர முதல்வர் மீது கல் வீச்சு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!

 
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர் கற்கள் வீசியதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் விஜயவாடாவில் பேருந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் பேருந்தின் மீது ஏறி பேசத் தொடங்கும் போது, கட்சி தொண்டர்கள் அவருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தனர். பின்னர் கூட்டத்தில் இருந்த ஒருவர் ஜெகன்மோகன் மீது கற்களை வீசினார். ஜெகன்மோகனின் நெற்றியில் கல் தாக்கி ரத்தம் வழிந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.  அவருடன் வந்த எம்எல்ஏ வெள்ளம்பள்ளி சீனிவாசும் கல் வீச்சில் காயம் அடைந்தார். உடனடியாக ஜெகன்மோகனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதையடுத்து, அவர் மீண்டும் பேருந்து பரப்புரையைத் தொடங்கினார்.


இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதைப்போல் "மாண்புமிகு ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயகச் செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். எனவே அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ." என்று  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web