திடீர் உடல்நலக் குறைவு... அமித்ஷாவின் தமிழக பயணம் ரத்து!

 
அமித்ஷா
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைப்பெற உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக  19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகள் பாஜக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக இன்று வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

பிரதமர் மோடி

இன்றும், நாளையும் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டது. மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி பகுதிகள் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பேசுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பாஜக தொண்டர்கள் உற்சாகமாக இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். 

இந்நிலையில், அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம், அவருக்கு ஏற்பட்ட திடீர்  உடல்நலக் குறைவு காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அமித் ஷா வேறொரு நாளில் பிரசாரம் செய்வார் என்றும் அதன் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தமிழக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web