பெண்களை தொழில் முனைவரோக மாற்றுவேன்... தமிழிசை சௌந்திரராஜன் சபதம்!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் தாமரை பூவை காட்டி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தனது பிரச்சாரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பெண்களால் நடத்தப்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சென்று ‘அக்கா வந்திருக்கிறேன்’ எனக் கூறுகிறார். தென்சென்னையின் ஒவ்வொரு பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று பிரச்சார வாகனத்தை நிறுத்தி நடந்து சென்று பொதுமக்கள் பிரச்சனைகளை கேட்டறிகிறார். அதனை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டு வெற்றி பெற்றதும் இந்த பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி அளித்து வருகிறார்.
இன்று காலை சைதாப்பேட்டை பகுதிகளில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். அம்பாள் நகர், பூமகள் மெயின் ரோடு, ஹில்ட்டன் ஓட்டல், கங்கையம்மன் கோயில் தெரு, வண்டிக்காரன் தெரு, கலைமகன் நகர், ஜோதி நகர், அச்சுதன் நகர், ஸ்வர்ணம் தெரு, லட்சுமி நகர், பூந்தமல்லி சாலை, தனகோபால் தெரு, அருள் பிரகாசம் தெரு, பாரதியார் தெரு என அனைத்து பகுதிகளிலும் திறந்த வெளி ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!