தமிழச்சி... தமிழிசை கட்டிப்பிடித்து நேரில் வாழ்த்து... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நேற்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. சுயேச்சைகள், சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மார்ச் 28ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ம் தேதி மாலை 3 மணி வரை காலஅவகாசம் உள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று தென்சென்னையில் போட்டியிடும் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழிசை சௌந்திரராஜன் இருவரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இருவரும் ஒரே நேரத்தில் சென்னை அடையாரில் இருக்கக்கூடிய தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வந்திருந்த போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு தமிழிசை சௌந்தராஜன் வருகை தந்தபோது, தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது வேட்புமனுவது தாக்கல் செய்துவிட்டு அப்போது தான் வெளியே வந்தார்.
தமிழச்சி தங்கப்பாண்டியனும் – தமிழிசை சௌந்தராஜனும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொண்ட போது இருவரும் கட்டி அணைத்து மாறி மாறி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். அவர்கள் இருவருக்கும் இருவரின் தந்தையரின் காலம் முதலே நீண்ட கால நட்பு. அரசியல் ரீதியாக இருவருக்கும் இடையே போட்டிகள் இருந்தாலும், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. தற்போது தேர்தல் களத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிராக போட்டியிடும் நிலையிலும் இருவரும் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டது தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!