50 வயதானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000... தெலுங்கு தேசம் வாக்குறுதி!

 
வயதான இந்திய மக்கள்

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற உள்ள நிலையில், ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடைப்பெற உள்ளது. வரும் மே 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே கட்டமாக ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சியினர் ஆந்திராவில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தால், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

வயதான இந்திய மக்கள்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு , தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்ததும், பிற்படுத்தப்பட்டோரின் நலன்களைக் காக்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும்.

வயதான இந்திய மக்கள்

ரூ.1.50 லட்சம் கோடியில் பி.சி. சப்-பிளான் திட்டம் அமல்படுத்தப்படும். சொந்த தொழில் புரிய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். சட்டப்பேரவையில் பி.சி.க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பி.சி.க்கு நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web