தேர்தள் களேபரம்... தமிழகம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை... ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

 
ஏடிஎம் கொள்ளை

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைப்பெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடைப்பெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரியில்  மர்ம நபர்கள் வங்கி ஏடிஎம் ஒன்றில், வெல்டிங் மிஷின் உதவியுடன் உடைத்து, ரூ.10 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையடித்து சென்றவர்கள் எப்படி அதிகாரிகளின் கண்களில் சிக்காமல், வெல்டிங் மிஷினுடன் ஏடிஎம் உள்ளே இருந்தார்கள், எபப்டி பணத்தை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. ரூ.50,000க்கு மேல் இருப்பதாக கூறி, வெளி மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த பெண் பயணியிடம் ரூ.69,000 யை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து சென்றவர்கள் பிடிபடவில்லையா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே, எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் வழக்கம் போல் சுமார் ரூ.16 லட்சம் பணம் இருப்பு வைத்துள்ளனர் . இந்நிலையில் இன்று அதிகாலை ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் கருப்பு நிற ஸ்ப்ரே அடித்துது விட்டு, வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, அதிகாலை 4 மணிக்கு ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது. கட்டுப்பாட்டு மையம் கட்டிடத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு ஏடிஎம் மையத்தை சென்று பார்க்க சொன்னார். அதன்படி அங்கு சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பது அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்த ரூ.10 லட்சத்துக்கும் மேல் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web