இதப் பார்றா... ரூ25000க்கு ரூ10 நாணயங்களை சுமந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்!

 
ஜெயராமன்

 தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தென்சென்னை தொகுதியில்  மண்டல அலுவலகத்துக்கு  ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’ என எம்ஜிஆர் பாடலை ஒலித்தபடி இரு சக்கர வாகனத்தில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.கே.ஜெயராமன்(48) மேல் சட்டை அணியாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.இது குறித்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதன் பிறகு   பாடலை நிறுத்திவிட்டு தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனுத் தாக்கல் செய்ய, டெபாசிட் தொகையான ரூ.25000க்கும் ரூ10 நாணயங்களுடன் சென்றார்.

ஜெயராமன்

தேர்தல் நடத்தும் அலுவலர் எழுந்து நின்று வேட்புமனுவை வாங்க மறுத்ததால், மனுதாக்கல் செய்யாமல் ஜெயராமன் திரும்பிச் சென்றுவிட்டார்.  இது குறித்து  ஜெயராமன்   “ நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன். தற்போது சோழிங்க நல்லூரில்  விவசாயம் செய்து வருகிறேன். இதுவரை சென்னை ஆர்.கே.நகர்,திருவாரூர், கீழ்பெண்ணாத்தூர் என  8 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளேன். கடந்த மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டேன்.  இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட மனுதாக்கல் செய்ய வந்தேன்.  

வேட்பு மனு தாக்கல்

தேர்தல் நடத்தும் அலுவலர் எழுந்து நின்று எனது வேட்பு மனுவை வாங்காததால், நான் ஆத்திரத்தில் திரும்பி வந்துவிட்டேன்” என்று அவர் கூறினார்.
அதே போல்   ஆவடி காமராஜர் நகரில் வசித்து வரும்  இன்சூரன்ஸ் ஏஜென்ட் பா. ஜெயக்குமார்  டெபாசிட் தொகையான ரூ. 25ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி தோளில் சுமந்து கொண்டு வந்திருந்தார். இவர்  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச.அருண்ராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web