வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை!

 
தேர்தல்

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ம் தேதி துவங்கி  ஜூன் 1-ம் தேதி வரை நடைப்பெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு
ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல்  ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்துள்ளது. 

இன்றுடன் ஓயும் தேர்தல் பிரச்சாரம்!கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்!
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின்னரும், எந்தவிதமான கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒரு மாநிலத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டால் அது பிற இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web