தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது... சீமான் ஆவேசம்!

 
சீமான்

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல்  7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக  ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி  நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.  அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தான் சங்கி: மேடையில் செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்!!


தேனியில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும்  பாஜக தன்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினார்கள். பாஜகவில் சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், தேர்தலில் போட்டியிட 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும் . 

சீமான் விவசாயி


பாஜகவுடன் கூட்டணி வைக்காததால்   கேட்ட சின்னம் கிடைக்கவில்லை  பாஜக கட்சி அலுவலகமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதனால் தான்  கரும்பு விவசாயி சின்னத்திற்கு பதிலாக  மைக் சின்னம்  வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.  

From around the web