‘உள்ளே வராதே...’ தொகுதிக்கு வந்த எம்.எல்.ஏ-வை விரட்டியடித்த பொதுமக்கள்... மயிலாடுதுறையில் பரபரப்பு!

 
 கீழ மூவக்கரை மீனவ மக்கள்

’உள்ளே வராதே... நாங்கள் இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை’ என்று தொகுதி எம்.எல்.ஏ.வை உள்ளே விடாமல் மீனவ மக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீழ மூவக்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி, கையில் கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். அப்போது, மீனவர்கள், ""கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு வராதது ஏன்? அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை, இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள்?'' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என்றும், திரும்பிச் செல்லுமாறும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மீனவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் பதில் அளிக்காமல் திரும்பிச் சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web