தேர்தல் அட்ராசிட்டி: ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை அடித்து விரட்டியடித்த கிராம மக்கள்!

 
அருண் நேரு
 

பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்றத்திற்கு பாஜக கூட்டணியில் பாரிவேந்தரும், அதிமுக கூட்டணியில் சந்திரமோகனும் திமுக கூட்டணியில் அருண் நேருவும் நாம் தமிழர் கட்சி சார்பாக சுயேட்சையாக ஒருவரும் களமிறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து வாக்கு சேகரிக்கச்சென்ற எம்.எல்.ஏவை கிராம மக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரம்பலூர் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற சென்ற திமுக எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு நா கூசும் வார்த்தைகளால் வசை பாடியதோடு சரமாரியாக பொதுமக்கள் கேள்வி எழுப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்வைரலாகி தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அருண்நேரு
 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமம் ராயப்பா நகரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தவர்களையும், காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற சென்ற திமுக எம்எல்ஏ. பிரபாகரன் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் முற்றுகையிட்டு தேர்தலுக்குப் பிறகு இப்பொழுது தான் தெரிந்ததா இந்த பக்கம் வந்து பல வருஷம் ஆச்சு இப்ப மட்டும் எதுக்கு இங்க வந்திங்க என சரமாரியாக கேள்வி எழுப்பி நாகூசும் வார்த்தைகளால் பொதுமக்கள் வசை பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 அருண்நேரு


நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வரும் சம்பவம் திமுக உள்ளிட்ட அவர்களது கூட்டணி கட்சியினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை வட்டம்,எறையூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு வாக்கு சேகரிக்க பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வந்தபோது சரமாரியாக கேள்வி கேட்டு விரட்டியடிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

From around the web